
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பஸ் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு டாக்டர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று ஏற்கனவே முதல்வர் பழனிசாமி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி , இன்று கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ நீங்கள் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதை விட்டு, அடுத்தவர் குழந்தைக்கு ஏன் உங்கள் பெயர் வைக்கிறீர்கள் ‘ என கண்டனம் தெரிவித்தார்.
1999- ஆம் ஆண்டு கோயம்பேட்டில் பஸ் நிலையம் அமைய கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ” கோயம்பேடு பஸ் நிலையம் அமைய மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தான் அடிக்கல் நாட்டினார் ” என தெரிவித்தார். கோயம்பேடு பஸ் நிலையம் அமைய உண்மையிலேயே நடவடிக்கை எடுத்தது யார் என்ற விவாதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!