
தேசிய விருதுக்கு மூன்று முன்னணி தமிழ் நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்திய திரை உலகில் வெளியாகும் படங்களில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து தேசிய விருது வழங்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான 65-வது தேசிய விருது நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன், சூர்யா மணிகண்டன் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் மற்றும் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆரியா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்கள் நாமினேட் ஆகியுள்ளன.
இந்த மூன்று படங்களில் எந்தெந்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்பது இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும். இருந்தபோதிலும் இந்த ரிசல்ட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த மூன்று படங்களின் உங்களது ஓட்டு எந்த படத்திற்கு என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
