
கிழக்கு வாசல் சீரியலில் இருந்து எஸ்ஏசி விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கிழக்கு வாசல். தனது சில வாரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியலை ராதிகா சரத்குமார் அவர்களின் ராடான் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பூவே பூச்சூடவா ரேஷ்மா தினேஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உட்பட பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி காரணமாக சீரியல் ஒளிபரப்பு நேரம் மாலை 4 மணிக்கு மாற்றப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் சீரியலில் நடித்து வரும் பெரும்பாலான நடிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் சாயங்காலம் 4 மணிக்கு யாராவது சீரியலை பார்ப்பாங்களா என்னப்பா இதெல்லாம் என்று கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் சீரியலை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் வராததும் இந்த நேரம் மாற்றத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என கூறுகின்றனர் தகவல் அறிந்தவர்கள்.