குஷி திரைப்படத்தின் மியூசிக் கான்சர்ட்டில் ஹாட்டான உடையில் கலந்து கொண்ட சமந்தாவின் போட்டோஸ், வீடியோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் இவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி குஷி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விஜய் தேவர்கொண்ட கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து குஷி திரைப்படத்தின் மியூசிக் கான்சர்ட் ஹைதராபாத்தில் நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மிகவும் ஹாட்டான உடையில் சமந்தா கலந்து கொண்டுள்ளார். மேலும் அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவர்கொண்ட உடன் இணைந்து நெருக்கமாக நடனமும் ஆடியுள்ளார். தற்போது அந்நிகழ்ச்சியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.