லோகேஷ் கனகராஜ் விரைவில் தொடங்க இருக்கும் கைதி 2 படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்வியில் சாம் சி எஸ் தான் என்று உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் செய்த மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் தான் “விக்ரம்”. உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலரும் இணைந்து நடித்த இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருந்த இந்த படம் இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவும் பெறாத வெற்றியைப் பெற்றிருந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் விஜயை வைத்து இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றின அதிகாரவபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்லோகேஷ் கனகராஜ் விஜய் படத்துக்குப் பிறகு அவர் கைதி 2 திரைப்படத்தைத் தொடங்குவார் என்று தெரியவந்துள்ளது.

இந்த படத்தின் முதல் பாகத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்தார். ஆனால் தற்போது வரை அனிருத்துடன் இணைந்து பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ். இந்த கைதி 2 படத்திற்கு இசையமைப்பாளராக யாரை தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இப்போது சாம் சி எஸ் தரப்பில் இருந்து கைதி 2 படத்துக்கு அவர்தான் இசையமைப்பார் என்று உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.