பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

KGF 2 Shooting will be held in hyderabad – கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட திரையுலகில் முதன் முதலாக இப்படமே ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

சிம்பு 45 குறித்த தாறுமாறான அப்டேட் – ரசிகர்களுக்கு செம விருந்து!

இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் உருவானது. அதற்காக கோலார் தங்க வயல் அருகே படப்பிடிப்பிற்காக அரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் தடை நீடித்துக்கொண்டே போவதால் வெறுத்துப்போன படக்குழு தற்போது எஞ்சிய படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.