வித்தியாசமான ஆடையில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து இருக்கிறார்.

Keerthy Suresh latest photoshoot viral:

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான தசரா திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி உள்ளது.

இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும் திரை பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வித்தியாசமான ஆடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.