ஹிந்தி தெரியாது போடா’ என சொல்லியதற்காக, தற்போது கீர்த்தி சுரேஷ் ஃபீலிங்ஸ்..
ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ள கீர்த்தி சுரேஷின் தற்போதைய ஃபீல் பார்ப்போமா?
கோலிவுட்டில் வென்று பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பாளராகவும் மாறி, விஜய் நடித்த ‘தெறி’ படத்தை ‘பேபி ஜான்’ என்ற பெயரில் எடுத்தார்.
இப்படத்தில், நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ்,வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் கேமியோ ரோலில் சல்மான் கான் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பேபி ஜான்’ படம் வெளியானது. ஆனால், ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், பாக்ஸ் ஆபிஸில் பயங்கரமாய் வதங்கியது. 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 60 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அட்லிக்கு .100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே இப்படி ஆகி விட்டதே என்ற கவலையில் இருக்கிறார். மேலும், நான் இந்திக்கு போவேன் என தெரிந்திருந்தால், ‘ரகு தத்தா’ படத்தில் நடித்திருக்கவே மாட்டேன்.
அந்த படத்தில், இந்தி திணிப்பை பற்றி நான், “இந்தி தெரியாது போடா..” என்ற டீசர் வெளியானபோது, பலர் என்னைப் பாராட்டினார்கள், தமிழகத்தில் எனக்கு ஆதரவு இருந்தது.
ஆனால், பாலிவுட் ரசிகர்கள் ‘இப்போதுதான் இந்தியில் அறிமுகம் ஆகிறீர்கள், அதற்குள் எங்கள் மொழியை பற்றி இப்படியா பேசுவது?” என்று கமெண்ட் போட்டார்கள்.
‘ரகு தத்தா’ படம் இந்தியை எதிர்க்கும் படம் இல்லை, என நான் எப்படி அவர்களிடம் சொல்லிப் புரிய வைப்பது என்கிற குழப்பம் இருக்கிறது’ என தற்போது கீர்த்தி சுரேஷ் ரொம்ப ஃபீல் பண்ணுகிறார்.