வடிவேலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து விளக்கம் கிடைத்துள்ளது.

Keerthi Suresh in Nai Sekhar Returns : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவரது நடிப்பில் அடுத்ததாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

நியூசிலாந்து வீரர்களை குற்றம் சொல்லாதீர்கள் : மெக்லெகன் வேண்டுகோள்

வடிவேலுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?? கோலிவுட்டை பரபரப்பாக்கிய தகவல் - உண்மை என்ன??

அதேசமயம் இது குறித்த விளக்கமும் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடி எல்லாம் கிடையாதாம். தனியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela | Emotional speech | HD

பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெகு விரைவில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.