Keerthi Suresh in Bollywood
Keerthi Suresh in Bollywood

Keerthi Suresh in Bollywood – பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள கீர்த்திக்கு முதல் படத்திலேயே செம லக் அடித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழில் டூயட் பாடி வந்த கீர்த்தி சுரேஷ் மகாநதி திரைப்படத்தில் தன்னுடைய அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டிலும் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஆம், சஞ்சய் தத் நடித்து வரும் திரைப்படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் கீர்த்தி இளமை, முதுமை என இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார்.

பாலிவுட்டில் முதல் படத்திலேயே முதல் முறையாக கீர்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறி வருகின்றனர். நீங்க ஒரு கலக்கு கலக்குங்க கீர்த்தி.