பிக் பாஸ் சீசன் 7-ல் கயல் சீரியல் நடிகை பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசனின் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கயல் சீரியல் நடிகை பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாம், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் டாக்டர் கௌதமுக்கு எடுபிடியாக வில்லியாக அன்னபூரணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் என தெரிய வந்துள்ளது. ‌

இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.