கவினை தொடர்ந்து நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார் சீரியல் நடிகர்.

தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது நீண்ட நாள் தோழியுடன் காதல் திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்தன. இவர்களைப் போல இன்னொரு சீரியல் நடிகரும் தன்னுடைய நாள் தோழியை காதலித்து திருமணம் செய்து உள்ளார்.

ஆமாம் தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அஜய் பரத். வில்லன் வேடத்தில் நடித்து வந்த இவர்தான் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார்.

இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் இவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே சீரியல் வரும் சனிக்கிழமையோடு முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.