டாடா படத்தின் வெற்றியால் சம்பளத்தை உயர்த்தி உள்ளார் கவின்.

Kavin Increased Salary For Upcoming Movies : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். இதைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும் நடிகராகவும் கலந்து கொண்டிருந்த இவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பாப்புலரான அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டடிக்க தொடங்கின. இறுதியாக வெளியான டாடா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் கவின் தன்னுடைய அடுத்த படங்களுக்கான சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.