பிக் பாஸ் கவின் திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இதைத்தொடர்ந்து தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் வலம் வந்த இவர் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இன்னும் பாப்புலர் ஆன கவின் பிறகு வெள்ளித்திரையில் லிஃப்ட் மற்றும் டாடா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில் கவின் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது காதலியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக முதலில் தகவல் பரவிய நிலையில் தற்போது நீண்ட நாள் காதலி மோனிகாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் யார் அந்த மோனிகா என்பது குறித்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.