
நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆரதனாவுக்கும் கத்தி பட ரிலீஸ் தேதிக்கும் இடையேயான தொடர்பால் ரசிகர்கள் பலரும் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தளபதி ரசிகர்கள் இன்றோடு கத்தி திரைப்படம் வெளியாகி 4 வருடங்கள் நிறைவு பெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதற்காக ட்விட்டரில் #4YearsofBlockbusterKaththi என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் இந்த நாள் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவின் பிறந்த நாளும் கூட. ஆம், ஆராதனா இன்று தன்னுடைய 5-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவருக்கும் ரசிகர்கள் #HBDAaradhanaSK என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
