கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!
கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

karuppu movie release date update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார்.
மேலும் சுவாசிகா,யோகி பாபு, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்கள் நடிந்துள்ளனர்.தற்போது இந்த படத்தில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது ஜனவரி 23ஆம் தேதி இந்த திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

karuppu movie release date update
