Karunakaran wants to act with Vijay | IlayaThalapathy vijay, Tamils have a strong name in the chest. Thalapathy 63 | Vijay | Kollywood

Karunakaran wants to act with Vijay :

ஆரம்பத்தில் டிவிட்டரில் விஜய் ரசிகர்களுடன் மோதிவந்த கருணாகரன் அண்மையில் விஜய்யிடம் மன்னிப்பு கேட்டு சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தளபதி 64 படம் குறித்து பேசியதற்கு ’பிராடு பசங்க’ என திட்டிய பிரபல நடிகை!

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவருக்கு பிரபலங்களே ரசிகர்களாக உள்ளனர். அதில் புதிதாக இணைந்துள்ளார் கருணாகரன். ஆரம்பத்தில் டிவிட்டரில் விஜய் ரசிகர்களுடன் மோதிவந்த இவர் அண்மையில் விஜய்யிடம் மன்னிப்பு கேட்டு சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் விஜய் குறித்து அண்மையில் பேசிய அவர், “விஜய்யிடம் ஏற்கனவே இரண்டு படங்களில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அது நிறைவேறாமல் போனது. எனினும் அவருடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும்” என்றார்.