
ப்ரோமா போட சொன்னா முத்து மூவி போடுறீங்க என கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

கார்த்திக் ராஜ், அர்த்திகா, என பலர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த செய்திகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் முத்து பட பாணியில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது இரவு 10 மணிக்கு தனியாக சந்திக்கவும் தங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என லெட்டர் எழுதி ஒருவர் மாற்றி ஒருவர் கைக்கு வர கடைசி எல்லோரும் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் கார்த்திகை தீபம் ப்ரோமோ போட சொன்னா முத்து படத்தை போடுறீங்க என கலாய்த்து வருகின்றனர்.