இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஜெய்லர் படம் குறித்த பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இப்படத்தை ரசிகர்களுடன் திரை பிரபலங்கள் பலரும் திரையரங்குகளில் கண்டு களித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் “ஜெயிலர்” திரைப்படத்தின் FDFS பார்த்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜெயிலர் பேச்சில்லா… கூஸ்பம்ப்ஸ் தான்… தலைவர் ஒவ்வொரு ஃபிரேமிலும் தீயாக தெரிகிறார். அனிருத் இசை சிறப்பாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நடிகர்கள் மற்றும் குழுவினர் தெறி மாஸ்ஸ். தலைவர் படத்திற்கு வாழ்த்துக்கள்”. என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்களும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். இவர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.