karthi salary for meiyazhagan movie
karthi salary for meiyazhagan movie

மெய்யழகன் படத்தில் நடிக்க கார்த்தி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பிரேம்குமார் இயக்கத்திலும், சூர்யா, ஜோதிகா தயாரிப்பிலும், கோவிந்த் வசந்தா இசையிலும், உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளிலேயே ஐந்து கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ், கருணாகரன், இளவரசு போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தில் நடிக்க கார்த்தி 15லிருந்து 20 கோடி வரை வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் பொறுத்திருந்து பார்க்கலாம்.