Karthi New Film
Karthi New Film

Karthi New Film – தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

கைதியை தொடர்ந்து கார்த்தியின் புதிய படம் – புகைப்படங்களுடன் இதோ.!

அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது.

இதை தொடர்ந்து ரெமோ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் அவரது ஜோடியாக இன்கேம் இன்கேம் புகழ் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இதுபோக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும் படத்தை அண்மையில் துவங்கினார். இந்நிலையில் தற்போது இன்னொரு இயக்குனரிடமும் கார்த்தி கதை கேட்டு வைத்துள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – காரணம் கேட்டா சிரிப்பா சிரிப்பீங்க.!

சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கௌரவ் அண்மையில் கார்த்தியை சந்தித்து கதை கூறியுள்ளார்.

ஆனால் இது வெறும் பேச்சுவார்த்தையில்தான் உள்ளதாம். விரைவில் கார்த்தி இப்படம் குறித்து முடிவு செய்வார் என கூறப்படுகிறது.