Karnataka CM Kumaraswamy
Karnataka CM Kumaraswamy

Karnataka CM Kumaraswamy – சென்னை : “கர்நாடகாவும், தமிழகமும்.. இந்தியா, பாகிஸ்தான் அல்ல, மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை கவுரவ பிரச்சனையாக பார்க்கக்கூடாது” என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அதில் அவர் பேசுகையில்: “மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான கோரிக்கையை தமிழக அரசிடம், கர்நாடக கடந்த 30 வருடங்களாக வலியுறுத்தி வருகிறது.

மேலும் இந்த காவிரி பிரச்சனை இரண்டு மாநிலங்களுடையே கடந்த 125 வருடங்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்” .

மேலும், கர்நாடகாவில் உபரி நீரை சேமிக்கவே புதிய அணை கட்டப்படுவதாகவும், மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை கவுரவ பிரச்சனையாக பார்க்கக்கூடாது எனவும்,

மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக அரசும், மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையில், “கர்நாடகாவும், தமிழகமும் ஒன்றும் இந்தியா, பாகிஸ்தான் அல்ல” என்றும் முதல்வர் குமாரசாமி கருத்து கூறியுள்ளார்.

மேலும் மேகதாதுவில் அணை கட்டிய பின்னர், புதிய அணையில் இருந்து ஒருபோதும் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம் எனவும், அணைக்கட்டு இல்லாததால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் பெருமளவு கடலில் கலக்கிறது” எனவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.