Kanimozhi vs Tamilisai :
Kanimozhi vs Tamilisai :

Kanimozhi vs Tamilisai :

தூத்துக்குடி: கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே தமிழிசை இங்கு போட்டியிடுகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பிரச்சாரத்தில் பேசுகையில், திமுகவிலிருந்து சிறந்த வேட்பாளரை தூத்துக்குடி மக்கள் பெற்றிருக்கிறார்கள். தூத்துக்குடி மக்கள் பிரச்சினைகளுக்கு கனிமொழி தீர்வு காண்பார் என கூறினார்.

மேலும் “தோற்பதற்காகவே தமிழிசை இங்கு போட்டியிடுகிறார். பாஜக செல்வாக்கு மிக்க மாநிலங்களில்தான் கலவரங்கள் அதிகமாக நடந்துள்ளன.

தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க பார்க்கிறார்கள்” என பாஜக குறித்து விமர்சனம் செய்தார்.

இருப்பினும், திமுக தமிழ்நாட்டை கலவர பூமியாக்க அனுமதிக்காது என்று கூறினார். மேலும் எடப்பாடி அரசை தூக்கி எறிய வரும் 18-ஆம் தேதி தமிழக மக்கள் பன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எடப்பாடி அரசுக்கு தமிழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி இரங்கல் கூட தெரிவிக்கிவல்லை. வடமாநிலத்தில் ஒரு பிரச்சினை என்றால் மோடி அமைதியாக இருந்துவிடுவாரா?? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும், தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்படும்,சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும், போன்ற பல வாக்குறுதிகளை ஸ்டாலின் தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.