கங்குவா படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

Web Ads

கங்குவா படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

kanguva movie latest update viral
kanguva movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் யோகி பாபு ,பாபி தியோல், கருணாஸ்,நட்டி நட்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் தற்போது இந்த படத்தில் நடிக்க சூர்யா 39 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kanguva movie latest update viral
kanguva movie latest update viral