கங்குவா திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் DSP பகிர்ந்திருக்கும் சுவாரசியமான அப்டேட் வைரலாகி வருகிறது.

Kanguva movie latest update viral:

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா”. பிரம்மாண்டமான தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படம் தொடர்பான சுவாரசியமான தகவலை படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “கங்குவா திரைப்படத்தின் சில காட்சிகளை அவர் பார்த்ததாகவும், படம் வெறித்தனமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறியிருக்கிறார். அதன் பிறகு இதில் நடிகர் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்”. அது தற்போது வைரலாகி வருகிறது.