கங்குவா படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் பத்து மொழிகளில் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பொங்கல் விருந்தாக கங்குவா திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.