படு மிரட்டலான லுக்கில் சூர்யாவின் கங்குவா கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கங்குவா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் திஷா பதானி உட்பட பலரது நடிப்பில் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் உருவாக்கி வருகிறது.

இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று இரவு இணையத்தில் வெளியானது. படு மிரட்டல் வெளியான இந்த வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வீடியோ வெளியான 8 மணி நேரத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

YouTube video