விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை கங்கணா ரனாவத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கணா ரனாவத். தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கங்கணா மீண்டும் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.