தவறான விமர்சகர்களுக்கு, கங்கனா ரனாவத் அதிரடி பேச்சு
‘ஆஸ்கர் தேவையில்லை, தேசிய விருது இருக்கிறது’ என கூறியுள்ளார் நடிகை கங்கனா. இது குறித்த விவரம் காண்போம்..
கங்கனா ரனாவத் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு வந்த விமர்சனங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
‘எமர்ஜென்சி’ படத்தை கங்கனா ரனாவத் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கடந்த ஜனவரியில் ரிலீஸானது.
தியேட்டரில் தோல்வியை தழுவிய இப்படம் அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இப்படத்தை இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும்’ என பதிவிட்டிருந்தார். அதை கங்கனா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து அளித்த பதில் வைரலாகி உள்ளது.
அதில், ‘அமெரிக்கா தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பவில்லை. வளர்ந்து வரும் நாடுகளை எப்படி மிரட்டி, ஒடுக்கி, வளைக்கிறார்கள் என்பதை ‘எமர்ஜென்சி’ படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அதனால், அவர்களின் ஆஸ்கர் விருது அவர்களிடமே இருக்கட்டும். எங்களுக்கு தேசிய விருது உள்ளது’ என கூறியுள்ளார்.
சினிமா தயாரிப்பாளர் சஞ்சய் குப்தா, இந்த திரைப்படத்தை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாகவும், ஆனால் கங்கனா நடிப்பிலும், இயக்கத்திலும் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், இந்த திரைப்படம் உலகத்தரம் வாய்ந்தது என்றும் கங்கனா ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து அதற்கு பதில் அளித்துள்ளார்.
‘சினிமா துறை
யினர் வெறுப்பு மற்றும் தவறான எண்ணங்களில் இருந்து வெளியே வந்து, நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும். அப்படி பாராட்டிய சஞ்சய் ஜிக்கு நன்றி. தவறான எண்ணம் கொண்ட சினிமா விமர்சகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது,
‘என்னைப் பற்றி எந்த எண்ணமும் வைத்துக்கொள்ள வேண்டாம். என்னை எடை போடவும் வேண்டாம். நான் உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டவள்’ என தெரிவித்துள்ளார்.