எனக்கேற்ற கதை தேடுகிறேன்: நடிகை அனுஷ்கா
காதி, கத்தனார் படங்களை தொடர்ந்து தான் நடிப்பதற்கு ஏற்ற கதையை தேடுகிறார் அனுஷ்கா. இது பற்றிப் பார்ப்போம்..
நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது நடித்துள்ள படம் ‘காதி’ படத்தில் விக்ரம் பிரபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
போஸ்டரில் அனுஷ்கா டெரர் லுக்கில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
அனுஷ்கா, ரத்தம் வழியும் முகத்துடன் புகை பிடித்தவாறு ஸ்டில் மிரட்டலாய் காட்சியளித்தது. லேடி கேங்ஸ்டர் கதையாக ‘காதி’ திரைப்படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.
2010-ம் ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான ‘வேதம்’ படத்துக்கு பிறகு இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடியும், அனுஷ்கா காம்போவில் உருவாகும் படம் ‘காதி’. தெலுங்கில் பெரிய பேனரான யுவி கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.
விரைவில் ரிலீஸாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. ‘காதி’ படத்தை தொடர்ந்து ‘கத்தனார்’ என்ற மலையாள படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதனால், ஹூரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை உருவாக்கிய தமிழ்த்திரை இயக்குனர்கள் அனுஷ்காவிடம் கதை சொல்லி வருகிறார்கள்.