KamalHaasan Birthday Celebration in Bigg Boss

உலகநாயகன் கமல் ஹாசனிடம் பிறந்தநாள் ட்ரீட் கேட்டுள்ளார் பிக் பாஸ். அதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

KamalHaasan Birthday Celebration in Bigg Boss : தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

சனிக்கிழமை என்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கில் பங்கேற்று உள்ளார். அங்கே அவர்களிடம் பிக்பாஸ் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பின்னர் ட்ரீட் கேட்டுள்ளார்.

ட்ரீட் என்ற வார்த்தையால் உலக நாயகன் கமல்ஹாசன் நான் எல்லோரையும் எப்போதும் ஒரே மாதிரிதான் நடத்துவேன் அதுதான் ட்ரீட் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/Biggboss_luv/status/1324999247125622784?s=19
https://twitter.com/ItzMeBiggBoss/status/1324997686165082112?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.