
வீடு மட்டும் ரெண்டு இல்ல சம்பளத்தையும் டபுள் மடங்காக உயர்த்தியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகியிருந்தன. அது மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இடம் பெற போவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

அடடே இது செமையா இருக்கே, அப்ப பிக் பாஸ் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் போலயே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருந்து வந்த நிலையில் அவர்கள் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது கமலின் சம்பள விவரம்.
ஆமாம் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் வீடு மட்டும் ரெண்டு இல்ல கமலின் சம்பளமும் இரண்டு மடங்கு தான் என தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் 6-ஐ தொகுத்து வழங்க ரூபாய் 75 கோடி சம்பளம் வாங்கிய கமல் இந்த சீசனுக்காக ரூபாய் 130 கோடியை சம்பளமாக பெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஒரு வீட்டுக்கு 75 கோடினா ரெண்டு வீட்டுக்கு ரூ 130 கோடி ஆண்டவர் கணக்கு கரெக்ட்டா இருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
