பொன்னியன் செல்வன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான திரைப்படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் நடிகர் ரஜினிகாந்துடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் தற்போது வரும் 29ஆம் தேதியான நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதை ஸ்பெஷல் வீடியோவுடன் படக்குழு தெரிவித்துள்ளது.