Kalavani 2

Kalavani 2 : 90 ml படத்தால் ஓவியாவுக்கு களவாணி 2 படத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சற்குணம் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் களவாணி. தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையை பற்றி பேசிய இப்படத்தின் மூலமாக தான் விமல் ஹீரோவாகவும் ஓவியா ஹீரோயினியாகவும் அறிமுகமானார்.

இந்த படத்தை அடுத்து சில படங்களில் ஓவியா நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலமாக முடியவில்லை. கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது.

அதன் பின்னர் ஓவியா நடித்த 90 Ml திரைப்படம் தண்ணி, பப்பு, சிகிரெட் என அவரை வேறொரு கலாச்சாரத்திற்கு மாற்றியது.

இதனால் தற்போது உருவாகி வரும் களவாணி 2 படத்தில் ஓவியாவின் கேரக்டரை மக்கள் ஏற்று கொள்வார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

தற்போது இயக்குனர் சற்குணம் நிச்சயம் களவாணி 2 படத்தில் 90 Ml ஓவியா இருக்க மாட்டார். முதல் பாகத்தை போலவே இப்படமும் பேசும் விதத்தில் இருக்கும்.

அழுத்தமான கதையுடன் உருவாகி வரும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் சேர்ந்து ஒரு சில நடிகர்கள் நடிகைகளும் நடித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.