ரஜினி குறித்து தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் சுவாரசியமான பேச்சின் தகவல் வைரல்.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கலாநிதிமாறன். சன் பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ள இவர்கள் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தையும் தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் நேற்றைய தினம் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து உரையாடி இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், “ரஜினி சாருக்கு இப்பொழுது 72 வயது ஆனாலும் இன்னும் நிறைய தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று கொண்டு தான் இருக்கிறார்கள். அதே மாதிரி உங்களுக்கும் நின்னாங்கனா நீங்களும் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லுங்க அதுவரைக்கும் இந்திய திரையுலகில் ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார்” எனக் கூறியிருக்கிறார். இவரது இந்த பேச்சு அரங்கத்தையே அதிர விட்டுள்ளது.