Kajal Aggarwal

Kajal Aggarwal : இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் ரோல் குறித்து வெளியான தகவல் நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்பு கொல்லாததற்கு இது தான் காரணமா? என நெட்டிசன்கள் சந்தேகப்படுகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி செம சூப்பர் ஹிட்டான படம் இந்தியன் 2. இப்படத்தின் இரண்டாம் 22 வருடங்களுக்கு பிறகு தற்போது உருவாக உள்ளது.

படு கவர்ச்சி லுக்கில் ரசிகர்களை கிளுகிளுப்பாகிய காஜல் – புகைப்படம் இதோ.!

இந்த படத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்க காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் சமீபத்தில் அவர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்க இருப்பதாக தகவல் வைரலானது.

ஆனால் படக்குழு தரப்பில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் நெட்டிசன்கள் இதனை பற்றி விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

சிம்பு கமல்ஹாசனுக்கு பேரன் என்றால் காஜல் அகர்வால் இந்த படத்தில் பாட்டியாக தான் நடிக்கிறாரா? தற்போது பிஸியாக நடித்து வரும் காஜல் சிம்புவுக்கு பாட்டியாக எப்படி நடிக்க ஒப்பு கொண்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தில் இப்படியொரு நடிகையா? – லீக்கான லேட்டஸ்ட் தகவல்.!

மேலும் பாட்டி வேடம் என்பதால் தான் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொள்ளவில்லையா எனவும் கேலி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.