Kajal Agarwal Learn to Cooking
Kajal Agarwal Learn to Cooking

பத்து வருஷமா நடக்காதது இப்போ நடந்துடுச்சு என காஜல் அகர்வால் தன் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Kajal Agarwal Learn to Cooking : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த பத்து வருடங்களாக காஜல் அகர்வால் பிசியான நடிகையாக திரையுலகில் வலம் வருவதால் மற்றும் வேறு எந்த வேலையிலும் அவரால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி நடிகையாக காலம் தள்ள முடியும் அதற்கு நீங்கள் தயாரா? பிரியா பவானி சங்கர் கொடுத்த அடுத்த அதிரடி பதில்!

இந்த வருடங்களில் அவர் பத்து வருடமாக செய்ய வேண்டும் என எண்ணிய ஒன்றை செய்து முடித்துள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு சமையல் கற்றுத்தர வேண்டும் என்பது அவருடைய அம்மாவின் ஆசையாம். படங்களில் பிசியாக நடித்து வந்ததால் அதற்காக நேரம் ஒதுக்க முடியாமல் இருந்து வந்துள்ளார் காஜல் அகர்வால்.

தற்போது இரண்டு மாதம் ஊரடங்கால் வீட்டில் இருந்து வந்த காஜல் தன்னுடன் அம்மாவிடமிருந்து சமையலை கற்றுக் கொண்டுள்ளார். கிச்சன் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தன்னுடைய அம்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக காஜல் அகர்வால் கூறியுள்ளார்.