Priya Bhavani Shankar Says About Glamour Role
Priya Bhavani Shankar Says About Glamour Role

படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயாரா என கேட்டதற்கு பிரியா பவானி சங்கர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

Priya Bhavani Shankar Says About Glamour Role : தமிழ் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.

இதனையடுத்து அவர் மேயாதமான் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார். அந்தப் படத்திற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார்.

ப்ரியா பவானி சங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகரின் கேள்விக்கு அவரே வெளியிட்ட ஷாக் தகவல்.!

மேலும் மாபியா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2, பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் இவரிடம் பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி நடிகையாக சிறிது காலம் தள்ள முடியும் என்பது மறுக்க முடியாத ஒன்று. இப்படியான சூழ்நிலையில் நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு பிரியா பவானி சங்கர் என்னுடைய முகத்திற்கும் உடற்கட்டுக்கும் கவர்ச்சி செட்டாகாது. மேலும் நான் நிச்சயம் அப்படி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.