நான் குடிப்பேன் தான் எனக்கு நீ எப்ப சரக்கு வாங்கி கொடுத்த என திரௌபதி இயக்குனரை கிழித்து எடுத்துள்ளார் காஜல் பசுபதி.
Kaajal Pasupathi Blast Mohan G : தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டும் பிரபலமானவர் காஜல் பசுபதி.
இவர் சில வாரங்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் மோகன் ஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நடித்த போது நான் என்னென்ன வாங்கி கொடுத்தேன் என லிஸ்ட் போடட்டுமா என மோகன்ஜி கேட்க காஜல் பசுபதி அதற்கும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நான் நடித்த போது சரியாக பேட்டா கூட கொடுக்கவில்லை. பிரஜனுக்கு கேரவன் கூட இல்லை. சொந்த காரில் தான் வந்து சென்றான் கூறியுள்ளார்.
மேலும் நான் குடிப்பேன் தான் ஆனால் குடிகாரி அல்ல. எப்போதாவது ஏதாவது நிகழ்ச்சியில் குடிப்பேன் அதை நான் மறுக்கவில்லை.
இவர் எப்போ எனக்கு சரக்கு வாங்கி கொடுத்தார்? அப்போ இவர் நிதானத்தில் இல்லையா என விளாசியுள்ளார் காஜல் பசுபதி.