நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தற்போது வரை பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் திருமணமாகி கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பிறகும் பிறகும் உத்வேகமாக பல முக்கிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில் அவர் காபியில் குளிப்பது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.