Jyothika Upcoming Movies

ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Jyothika Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் வாலி, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, உயிரிலே கலந்தது, பிரியமான தோழி, திருமலை, வேட்டையாடு விளையாடு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன் பின்னர் நடிகர் சூர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.

ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தில் ஜோடியாக இந்த ஸ்டைலிஷ் ஹீரோவா? வெளியான சூப்பர் ஹிட் தகவல்.!

பிறகு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து இவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.