Jyothika Silambaattam Video
புடவை, ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடிய ஜோதிகாவை பார்த்து ஷாக்காகியுள்ளார் DD.

Jyothika Silambattam Video  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

அதன் பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாக ரி என்ட்ரி கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார்.

பெண்ணாக மாறிட்டாரா கெளதம் கார்த்திக்?? அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் – இதோ பாருங்க.!

இந்நிலையில் ஜோதிகாவுக்கு ஆங்கில பத்திரிகை ஒன்று ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை அளித்துள்ளது.

அப்போது அவரிடம் ஒரு கம்பு கொடுத்து சிலம்பாட்டம் ஆட சொல்ல அவரும் அசலத்தலாக ஆடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

புடவை, ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு எப்படி இப்படி சிலம்பாட்டம் ஆட முடிகிறது? என ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளார் தொகுப்பாளினி DD.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.