நடிகை ஜோதிகாவின் சொந்த அக்கா பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா, அதன் பின்னர் அரசியலில் இறங்கி விட்டார், இதனால் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

இவருடைய தங்கையான ஜோதிகாவும் திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமாகி முன்னணி நடிகரான சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்று கொண்ட பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் நக்மா ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா இல்லை என்ற தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது ஜோதிகா தயாரிப்பாளர் சந்தர் சாதனாவின் மகளாவார். இவருடன் உடன் பிறந்தவர் ரோஷினி தானாம்.

அப்போ நக்மா யாருனு தானே யோசிக்கிறீங்க? நக்மா சந்தர் சாத்தனாவின் முதல் மனைவிற்கு பிறந்தவராம். ஜோதிகாவும் ரோஷிணியும் சந்தர் சாதனா அவர்களின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்களாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.