Jyothika & Vijay

Jyothika & Vijay : தளபதி விஜய்க்கு நிச்சயம் ஜோடியாக நடிப்பேன் என ஜோதிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா மீண்டும் கோலிவுட்டில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வெற்றிநடை போடுகிறார்.

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள காற்றின் மொழி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஜோதிகா ஒரு சில பேட்டிகளை கொடுத்திருந்தார். அப்படி அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் விஜயுடன் ஜோடி சேருவேன் என கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய ஜோ, குஷி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அப்படி அந்த படம் உருவானால் நான் தான் நாயகியாக நடிப்பேன்.

ஆனால், அந்த கதாபாத்திரம் முதிர்ச்சியானதாகவும் புத்திசாலித் தனமானதாகவும் இருக்கு வேண்டும் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பு எனவும் கூறியுள்ளார்.

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் 2000-ல் வெளியாகி இருந்த இந்த குஷி படம் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட படமாக உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kushi 2

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.