
படிப்பை பாதியில் நிறுத்தியது குறித்து விசித்ரா அட்வைஸ் கொடுக்க ஜோவிகா பதிலடி கொடுத்துள்ளார்.
Jovika Reply to Vichitra in Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் பங்கேற்றுள்ளார். இவர் சக போட்டியாளர்களுடன் பேசும்போது நான் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டேன். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை, நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால் அது தொடர்பான டிப்ளமோ படிப்பை முடித்து இருப்பதாக கூறினார்.

இதைக் கேட்டு விசித்ரா மற்றும் சில போட்டியாளர்கள் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்குமாவது படி என அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் ஜோவிகா இது பற்றி இனியும் யாரும் எதுவும் பேச வேண்டாம் என பதிலடி கொடுத்துள்ளார்.