சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கிண்டியில் உள்ள ஒருங்கிணைத்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களில் 500 பேரை வேலைக்கு நியமனம் செய்ய இருக்கிறது.

இந்த முகாமில் 10 தனியார் நிறுவனங்கள் 500 இளைஞர்களுக்கு வேலை வழங்க முன்வந்துள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் , தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்து சென்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள்!