ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் கடந்த 2014 இல் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இதில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்ததை தொடர்ந்து இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு மிரட்டலான ஷாட் வீடியோவுடன் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இதனால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக செலிப்ரேஷன் வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.