Jayalalitha Memorial
Jayalalitha Memorial

Jayalalitha Memorial – சென்னை: “சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” .

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

பின்னர், அந்த நினைவு இல்லம், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகளை தமிழக அரசு துவங்கியது.

இந்நிலையில், வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற எதிர்க்கட்சிகள் வரவேற்றாலும், அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.

தினகரன் தரப்பினர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் எதிர்த்து வந்தனர்.

நினைவு இல்லம் அமைப்பதை குறித்து தீபா கூறுகையில்: ” வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. இதனை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை கிடையாது.

இந்த இல்லத்திற்கு உரிமையானவர்களான எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் முதலமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார். இதை எதிர்த்து சட்ட ரீதியில் நடவடிக்கைகளை எடுப்பேன்’ என்று கூறினார்.

இந்நிலையில், இது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.எனவே, இன்று சென்னையில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதில் போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, வேதா நிலையத்தை அரசுடமையாக்க அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, ‘குடியிருப்பு பகுதியில் இப்படி போயஸ் இல்லத்தை நினைவில்லமாக மாற்றி அமைத்தால் எங்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும். மேலும் போயஸ் வீட்டை, நினைவிடமாக மாற்றினால், அங்கு நிறைய பேர் வந்து செல்வார்கள்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.இதனால் இங்கு அமைதியான சூழல் கண்டிப்பாக பாதிக்கப்படும். ‘ இவ்வாறு போயஸ் கார்டன் குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதனால் வேறு இடத்தில் நினைவிடத்தை மாற்ற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.