போனை திருடிக் கொண்டு ஓடிய நபருக்கு நன்றி கூறியுள்ளார் புகழ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் இடையே அதிகம் பிரபலம் அடைந்தவர் புகழ். இதற்கு முன்னதாக இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு தனி இடத்தை பெற்று தந்தது.

இதனைக் கடந்து தற்போது ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். முதல் முறையாக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது ஒருவர் தன்னுடைய செல்போனை திருடிக் கொண்டு ஓடினார்.

அன்னைக்கு நான் பயந்து ஊருக்குச் சென்று இருந்தால் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இன்னைக்கு 50 செல்போன் கடையை திறந்து வைத்திருக்கிறேன். செல்போனை திருடி கொண்டு ஓடிய திருடனுக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் அவர் உயிரோடு இருந்தால் என்னை பார்க்க வாங்க உங்களுக்கு ஐபோனே வாங்கித் தருகிறேன் என நன்றி தெரிவித்துள்ளார். ‌‌ ‌‌