ஜவான் திரைப்படத்தின் “வந்த இடம்” பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ. பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகியுள்ள இவர் தனது முதல் படமாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர், போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘வந்த இடம் என் காடு’ என்னும் பாடலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சமீபத்தில் படகுழு வெளியிட்டு இருந்தது. அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் அப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையதளத்தை அதிர விட்டு வைரலாகி வருகிறது.